களியக்காவிளை!!
கேரளமும், தமிழும் உறவாடிக்கொண்டிருக்கும் பூமி
எங்கெங்கிலும் போர்த்தியிருக்கம் பசுமை,
வீடுதோறும் கிணற்றில் குடிநீர்,
சுருங்க சொன்னால், அது சொர்க்கத்தின் சாயல்!!
மலர்ச்சியான பகுதிதான், எனினும் மகிழ்ச்சி மங்கிப்போயிருந்தது!
கல்வியில் வேள்வி கண்டபோதிலும், அங்கே கவலை குடியிருந்தது!!
வரதட்சணை வாழ்க்கை முறையாய் மாறியதால்
சோகங்களால் மக்கள் சோர்ந்து போயினர்!
தற்காலிகமாக மூவாயிரம் மாத ஊதியம் பெரும் ஆடவனுக்கு
ஏழு லகரமும் கொடுத்து திருமணமும் செய்ய வேண்டியது
பெண் வீட்டாரின் கடைமையாய் போனது!
கல்வி அறிவை மழுங்க செய்ததோ?
ஆண்கள் வெட்கம் கெட்டுப் போயினரோ?
சாக்கடையாய் மாறிக்கொண்டிருக்கும் சமூகம்
இனி யாரால் சுத்தம் செய்ய முடியும்?
தனி மனிதர்களின் மன மாற்றங்கள்
இந்த மானங்கெட்ட முறையை தவிடு போடியாக்கட்டும்!!
மனித குள்ள நரிகளின் குரல் வளையை நெரிக்கட்டும்!!
அப்போது மனிதம் செழிக்கும்! உலகம் மகிழும்!!
No comments:
Post a Comment