கருத்துகளை புரிந்து கொள்வதிலும் வாழ்க்கை வாழ்கிறது!!

எல்லாக் கணமும் நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். அதற்கேற்றார் போல், நம் கருத்துகளும் மாறிக் கொண்டிருக்கின்றன.

தோழர்கள்

Wednesday, 24 October 2007

மழையில் நனை!!

நனைவது எப்போதுமே ஆனந்தம் தான்!
அது மழையாகட்டும்!! அல்லது நம் அன்புக்குரியவர்களாகட்டும்!!!

கருமேகம் சூழ்ந்தவுடன் எங்கள் பள்ளியில் விடுமுறை மணி
ஓலிக்க ஆரம்பித்து விடும்!

அப்போது ஆரம்பித்தது கொட்டும் மழையில் நனையும் பழக்கம்!!
அம்மாவின் செல்ல திட்டுகளையும் லட்சியம் செய்யாமல்!!

அலுவலக நாள் என்றாலும் கூட , இன்றும் நனைய துடிக்கிறது மனம்,
பெரு மழையில் நனையாமல் , மழை சிதறல்களில் நனைந்து,
என்னை நானே அமைதிப் படுத்தி கொள்கிறேன் !!