கருத்துகளை புரிந்து கொள்வதிலும் வாழ்க்கை வாழ்கிறது!!

எல்லாக் கணமும் நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். அதற்கேற்றார் போல், நம் கருத்துகளும் மாறிக் கொண்டிருக்கின்றன.

தோழர்கள்

Sunday, 15 August 2010

சுதந்திர தினம் ஒரு கேலிக்கூத்து!!

தன்னலமற்ற தலைவர்களை காணவில்லை
மக்களாட்சியில் தினமும் மக்களே பலியிடப்படுகிறார்கள்
சாதியம் குருதி வார்த்து வளர்க்கப்படுகிறது
மத வெறியர்கள் தேர்தலில் வெற்றி கொள்கிறார்கள்
பழங்குடியினர் வேரோடு அகற்றப்படுகிறார்கள்
பசியில் வாடுபவர்களும், விலைவாசியும் அதிகரித்தவாறே!!
மன்னர்களின் ஆட்சியை அகற்றி விட்டோம்
அங்கே இப்போது குடும்பங்கள் குடியேறிவிட்டன

வானளாவிய கட்டிடங்களும், பெரிய வானூர்தி நிலையங்களும்
உலகிலேயே பெரிய பணக்காரர்களும் இந்தியாவில் இருக்கலாம்!
அதற்காகவெல்லாம் சுதந்திர தினத்தை எண்ணி
என்னால் மகிழ்ச்சி கொள்ள முடிவதில்லை!! 

எளிய மக்களின் இன்னல்கள் தீர்க்கப்படாத வரை,
அவர்களின் உரிமைகள் நிலை நிறுத்தப்படாத வரை,
சுதந்திர தினம் ஒரு கேலிக்கூத்து!!

No comments: